தன்னைவிட 29 வயது இளைய பெண்ணை காதலிக்கும் ஜேர்மானியருக்கு விழுந்த அடி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மானியர் ஒருவர் தன்னைவிட 29 வயது இளைய பெண்ணை காதலித்துவரும் நிலையில், முன் பின் தெரியாத ஒரு நபரிடம் அடிவாங்கிய சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

ஜேர்மனியின் Duisburgஐச் சேர்ந்த Michael Hoch (49)க்கு தன்னுடன் நாடக நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த Wuppertalஐச் சேர்ந்த Sarah Schopp (20) என்ற பெண் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் அந்த பெண்ணை முதல் முதலில் சந்தித்தபோது Sarahவுக்கு வயது 17 மட்டுமே. முகத்தில் நாணமும், ஈர்க்கும் புன்னகையுமாக நின்றுகொண்டிருந்த Sarahவை மறக்க முடியாமல் தவித்த Michael, அவருக்கு பேஸ்புக்கில் நட்பு கோரிக்கை விடுத்துள்ளார்.

முதலில் தங்களுக்கிடையே உள்ள வயது வித்தியாசம் காரணமாக மறுத்த Sarah, பின்னர் Michaelஐக் காதலிக்க தொடங்கியுள்ளார்.

இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கிவிட்டாலும், மற்றவர்கள் இந்த ஜோடியை பார்த்த விதம் வித்தியாசமாகத்தான் இருந்திருக்கிறது.

எல்லவற்றையும் விட, முன் பின் தெரியாத ஒருவர் Michaelக்கு கொடுத்த அடியை இன்றுவரை அவரால் மறக்கமுடியவில்லையாம். பொது இடத்தில் Sarahவின் கையைப் பிடித்தபடி Michael நிற்க, ஒருவர் வந்து Michael கையிலிருந்த Sarahவின் கையைப் பிடித்து இழுத்து, உன் வயது என்ன, உனது அடையாள அட்டையைக் காட்டு என்று கூறி பெரிய கலாட்டாவே செய்துவிட்டாராம்.

பின்னர் ஒரு வழியாக தப்பி வந்த ஜோடி, இப்போதெல்லாம் தங்கள் வயது வித்தியாசத்தைக் குறித்து பேசுபவர்களைப்பற்றி கவலைப்படுவதில்லையாம்.

அன்புக்கு எல்லையே இல்லை, நாங்கள் இருவரும் சந்தோஷமாக இருக்கிறோமா என்பதுதான் முக்கியம் என்கிறார்கள் இருவரும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்