ஜேர்மானியர்கள் எதைப்பற்றி அதிகம் கவலைப்படுகிறார்களாம் தெரியுமா?: ஆய்வு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மானியர்கள் அதிகம் கவலைப்படும் விடயமாக அகதிகள் பிரச்சினைதான் உள்ளது என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

ஜேர்மானியர்களை வருத்தும் விடயங்கள் எவை என கண்டறிவதற்காக சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்விலிருந்து, அகதிகள் பிரச்சினை மற்றும் சீதோஷ்ண மாற்றம் குறித்தே ஜேர்மானியர்கள் அதிகம் கவலைப்படுவதாக தெரியவந்துள்ளது.

ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் மூன்றில் ஒருவர், புலம்பெயர்தல்தான் ஜேர்மனியை வாட்டும் முக்கிய பிரச்சினை என்று கூறியுள்ளனர்.

அதே நேரத்தில், அடுத்த முக்கிய பிரச்சினையாக சீதோஷ்ண மாற்றம் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், முன்பைக்காட்டிலும் அதிகம் பேர், அதாவது 18 சதவிகிதம்பேர், சீதோஷ்ண மாற்றம்தான் முக்கிய பிரச்சினை என்று கூறியுள்ளனர்.

இவை போக, கல்வி, சமூக நீதி, சமுதாய அல்லது தொழில் முன்னேற்றம் ஆகியவையும் பிரச்சினைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

பாதுகாப்பு, குற்றம் மற்றும் தீவிரவாதம் ஆகியவை பட்டியலின் அடிமட்டத்தில்தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்