ஜேர்மனியில் படித்து வந்த இந்திய மாணவர் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

Report Print Vijay Amburore in ஜேர்மனி

ஜேர்மனியில் படித்து வந்த இந்திய மாணவர் திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் ரெட்டி (23) என்கிற மாணவர் Ruhr பெருநகர பகுதியில் உள்ள டூயிஸ்பர்க் எசென் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு எம்.எஸ். பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இவர் நான்காம் செமஸ்டரில் ஒரு சில பாடங்களில் தோல்வியுற்றதால், நான்கு நாட்களுக்கு முன் தன்னுடைய பெற்றோருக்கு போன் செய்து வருத்தமாக பேசியுள்ளார்.

அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அடுத்த தேர்வில் முயற்சித்துக் கொள்ளலாம் என அவருடைய தந்தை கோவிந்த், மகனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Asianet

ஆனால் மன அழுத்தம் நீங்காமல் இருந்த மோகன், புதன்கிழமையன்று அவர் தங்கியிருந்த அறையின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers