புதன் கிழமை பதவியேற்ற பிரதமரை வீட்டுக்கு அனுப்பிய ஏஞ்சலா மெர்க்கல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரதமராக பதவியேற்ற ஒருவரை, அவர் பதவியேற்று ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், வீட்டுக்கு அனுப்பிவிட்டார் ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல்.

கடந்த புதனன்றுதான் Thuringia மாகாணத்தின் பிரதமராக பதவியேற்றார் Thomas Kemmerich.

ஆனால், அவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

அத்துடன், Christian Hirte என்ற அமைச்சரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார் ஏஞ்சலா. காரணம் என்ன தெரியுமா? Thomas Kemmerich, வலது சாரிக்கட்சியான AfD ஆதரவுடன் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார்.

இதுவரை யாரும் வலதுசாரியினரின் ஆதரவை நாடாத நிலையில், Thomas வலதுசாரியினரின் ஆதரவுடன் வெற்றி பெற்றது ஜேர்மன் ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்குள் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது.

ஆகவே, அவருக்கு மேலிடம் கொடுத்த அழுத்தத்தால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

Christian செய்த தவறு? வேறொன்றுமில்லை, வலது சாரியினர் ஆதரவுடன் பிரதமராக பதவியேற்ற Thomasக்கு Christian பாராட்டு தெரிவித்திருந்தார், அவ்வளவுதான்...

ஆக மொத்தத்தில், இரண்டு அரசியல்வாதிகளும் வலதுசாரியினரால் வீட்டுக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

Thomas பிரதமர் பதவியை ராஜினாமா செய்தால்தான், அவர் சார்ந்த Free Democrats கட்சியுடனான கூட்டணி தொடரும் என ஏஞ்சலா அழுத்தம் கொடுத்ததாலேயே அவர் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Thomas தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதையடுத்து மீண்டும் Thuringiaவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

thelocal

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers