ஐேர்மனிய தேசிய உதைபந்தாட்ட அணியில் பங்குபற்றி உயிரிழந்த ஈழத்தமிழனிற்கு நினைவுத்தூபி

Report Print Dias Dias in ஜேர்மனி

ஐேர்மனியதேசத்தில் 15 வயதிற்கு உட்பட்ட தேசியஉதைபந்தாட்ட அணியில் இடம்பிடித்த முதல் ஈழத்தமிழன் என்ற பெருமையுடன் 2018 இல் காலனின் பிடியில் சாதனை வாழ்வை நிறுத்திச்சென்ற ஈழவன் பிரபாகரனின் நினைவுத்தூபி 10.05.2020 அன்று அவரது இரண்டாவது ஆண்டு நிறைவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவரது நினைவுத்தூபியினை பல ஆயிரம் யூரோ செலவில் இவரது விளையாட்டு ஆலோசனை ஒப்பந்ததாரர் வடிவமைத்துள்ளார்.

இவரது இரண்டாவது ஆண்டு நிறைவு தினத்தில் அவரது தூபியை திறந்து அவரின் அபூர்வ திறனுக்கு மதிப்பளிக்கும் வகையில், அவரது அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், என்னும் பல முக்கியஸ்தர்கள் பங்கேற்கஉள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்