கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபடவிருக்கும் மக்கள்: ஜேர்மனியில் பதற்றம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து ஜேர்மனியில் வார இறுதியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களில் ஈடுபட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் முதல் பில் கேட்ஸின் தடுப்பூசி திட்டம் வரை மக்களை ஆத்திரப்படுத்தியுள்ளதால் ஜேர்மனியில் எதிர்ப்புப் பேரணிகளின் எண்ணிக்கைகள் அதிகரித்து வருகிறது.

இது சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலையே அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் பொதுமக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறிய கூட்டமாக மக்கள் கூடிய நிலையில், சமீப வாரங்களாக எதிர்ப்பு பேரணிகள் அதிகரித்து, முக்கிய ஜேர்மன் நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் குவியத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையில், சேன்ஸலரின் தேர்தல் அலுவலகங்கள் முன் கல்லறை ஒன்றையொத்த கல் ஒன்று எழுப்பபட்டு மலர்களும் மெழுகுவர்த்திகளும் அதன் முன் குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

அந்த கல்லில் ஊடக சுதந்திரம், கருத்து சுதந்திரம், இயங்க, ஒன்றுகூட சுதந்திரம் மற்றும் குடியரசு 1990 - 2020 என்று எழுதப்பட்டுள்ளது.

அதாவது மொத்தத்தில் குடியரசு செத்துவிட்டது, அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன என்பதற்கு அடையாளமாக அந்த கல் எழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மீண்டும் ஸ்டட்கார்ட், முனிச் மற்றும் பெர்லினில் குவிய திட்டமிட்டுள்ளதால் அவ்விடங்களில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்