திருமண ஏற்பாடுகள் செய்யும் ஒரு பெண்ணுக்கு ஜேர்மனியில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது.
அதற்குக் காரணம், அவர் திருமண ஏற்பாடுகள் செய்தது ஐ.எஸ் அமைப்பினருக்கு! 30 வயதான Lorin எனப்படும் அந்த ஜேர்மானிய சிரிய பெண், தான் 2014இல் தனது கணவருடன் சிரியாவுக்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தான் செய்த செயல்களுக்காக வருந்துவதாக தெரிவித்துள்ள Lorin, ஐ.எஸ் அமைப்பிலிருந்து விலகியிருக்க விரும்பியதாக தெரிவித்துள்ளார்.
தீவிரவாத அமைப்பு ஒன்றின் உறுப்பினராக இருந்தது, ஜேர்மன் போராயுதங்கள் கட்டுப்பாட்டு சட்டத்தை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
ஐ.எஸ் அமைப்பினருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக, ஜேர்மனியிலிருந்து பெண்களை ஐ.எஸ் அமைப்புக்கு அழைத்துச் செல்லும் ஒரு பெண்கள் அமைப்பில் இருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆகவே அவருக்கு பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது.