ஜேர்மனிக்கு குடிபுகும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares

கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவில், கடந்த ஆண்டில் ஜேர்மனிக்கு குடிபுகும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளதாக அதிகாரப்பூரிவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

2019ஐ கணக்கிடும்போது மொத்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 31 சதவிகிதம் குறைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் உள்ள நாடுகளிலிருந்து ஜேர்மனிக்கு குடிபுகுவோர் எண்ணிக்கையோ, 2020இல் பாதிக்கும் மேல் குறைந்துள்ளதாம்.

அதிகபட்சமாக, ஜேர்மனிக்கு இந்தியர்கள் வருவது மிக அதிக அளவில் குறைந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்கர்கள், சீனர்களைப் பொருத்தவரை, ஜேர்மனிக்கு வருபவர்களைவிட, ஜேர்மனியிலிருந்து வெளியேறியுள்ளவர்கள்தான் அதிகம் என்கிறது அந்த புள்ளிவிவர அலுவலக கணக்கு.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்