ஐஸ்கீரிம்னா ரொம்ப பிடிக்குமா? இதை கொஞ்சம் படிங்க

Report Print Meenakshi in ஆரோக்கியம்

ஐஸ்கீரிமை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் இரசாயனம் கலந்து தயாரிக்கப்படும் ஐஸ்கீரிமில் உள்ள ஆபத்தை அறிந்தால் ஐஸ்கீரிம் பக்கமே தலை வைத்து படுக்கமாட்டோம்.

ஐஸ்கீரிமில் பழ வாசனையினை ஏற்படுத்த அசிட்டால் டிஹைடு என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது புற்றுநோயினை உண்டாக்கும் தன்மையுடையது.

மேலும், நச்சாகவும் செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை குறைத்து பார்கின்சன் நோய் உண்டாக இது காரணமாகிறது என கூறுகின்றனர்.

ஐஸ்கீரிம் உறைந்து போகாமல் இருப்பதற்காக கலக்கப்படும், ’அமைல்’ அசிட்டேட் என்னும் இரசாயனம் ரப்பர், சிமெண்ட், பெயிண்ட் மற்றும் தின்னர் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் பொருளாகும்.

ஈதல் அசிட்டேட் ரசாயனம்- அன்னாசி, பென்சில் அசிட்டேட்- ஸ்ட்ராபெர்ரி, பைப்ரினால்- வெண்ணிலா சுவையினை வழங்கக்கூடியதாகும்.

அத்துடன் இவை நீண்ட நாள்கள் கெடாமல் இருக்க பொட்டாசியம் ரசாயனமும் சேர்க்கப்படுகிறது. இதுவும் புற்றுநோயினை உருவாக்கும் தன்மை உடையதாகும்.

இது டி.என்.ஏ.,வில் கலந்து நச்சுத்தன்மையினை ஏற்படுத்தும். நீர்த்த நிலையில் இருக்கும் திரவத்தை, கூழாக மாற்ற, பாலி சோர்பேட் என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது.

இந்த ரசாயனம் சோப்பு, ஷாம்பு தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் நோய் எதிர்ப்பு சக்தியினை குறைக்கும் தன்மை உடையது.

இதில் சேர்க்கப்படும் சோள சர்க்கரை சாறு, அதிக இனிப்பு தன்மையை கொடுப்பதோடு, சர்க்கரை நோயை உண்டாக்கும்.

குழந்தைகளிடம் நடத்தை மாற்றுப்பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். சுவைக்காக சேர்க்கப்படும் வனஸ்பதி மற்றும் சில நிறமிகள் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments