பெண்களின் நோய் தீர்க்கும் ஆயுர்வேத மூலிகை

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்
59Shares
59Shares
lankasrimarket.com

சதகுப்பை அல்லது சதகுப்பி என்பது ஒரு பூக்கும் தாவர வகையாகும். அபிசியே குடும்பத்தைச் சார்ந்த இத்தாவரம் ஆண்டுக்கு ஒரு தரம் வளரும் தன்மைகொண்டது ஆகும்.

ஆயுர்வேத மூலிகையாகப் பயன்படுகிறது. இது பேரின வகையைச் சேர்ந்தது ஆகும்.

சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் வகைக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடியாக்கி சம அளவு பனை வெல்லம் சேர்த்து அரைத்து 5 கிராம் காலை, மாலை இருவேளை சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து சோம்புக் குடிநீர் குடித்து வர உதிரச் சிக்கல், நீங்கிக் கருப்பை பலப்படும்.

சதகுப்பைச் சூரணம் ஒரு கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வரப் பசியின்மையைப் போக்கும். வாதநோயைக் கட்டுப்படுத்தும். இரைப்பை, நுரையீரல் ஆகியவற்றில் உள்ள மாசுகளை அகற்றும்.

சதகுப்பை விதையை அரைத்து, வெந்நீராவியில் வேகவைத்து இதன் வேருடன் அரைத்து கீல் வாயுவிற்குப் பற்றுப் போட நல்ல பலன் கிடைக்கும்.

சதகுப்பை இலையைக் கைப்பிடியளவு அரைத்து எடுத்து 500 மி.லி விளக்கெண்ணையுடன் கலந்து காய்ச்சி வடிகட்டி குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்த நோய்க்கு 5 சொட்டு வீதம் 3 வேளை கொடுக்கலாம். இதையே சூதகசந்தி, சூதகக்கட்டு, காக்கை வலிப்பு முதலியவற்றிற்கும் கொடுக்கலாம்.

சதகுப்பை இலையை அரைத்து 15 கிராம் எடுத்து ஒரு டம்ளர் நீரில் கலந்து கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி 30 மில்லியளவு 3 வேளையாகக் குடித்து வர பசி மந்தம், மூக்கு நீர்ப் பாய்தல் குணமாகும்.

சதகுப்பை இலைச்சாறு 10 முதல் 20 துளிகள் தேன் அல்லது கோரோசனையுடன் கலந்து 4 மணிக்கு ஒரு தடவையாகக் கொடுத்து வர குழந்தைகளுக்கு உண்டாகும் இசிவு, வயிற்றுப் புழு வெளியேறும்.

சதகுப்பை இலையைக் கைப்பிடியளவு எடுத்து இடித்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி பிள்ளை பெற்றவருக்குக் குடிக்கக் கொடுக்க உதிரச் சிக்கல் அகலும்.

சதகுப்பை விதையை இடித்துப் பொடியாக்கி 30 கிராம் எடுத்து 500 மில்லி வெந்நீரில் ஊற வைத்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், பெரியவர்களுக்கு உண்டாகும் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், குணமாகும். இத்துடன் சுண்ணாம்பு தெளிந்த நீரைச் சிறிது சேர்த்துக் கொடுக்க இது அதிகப் பலனைக் கொடுக்கும்.

சதகுப்பை இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து 15 கிராம் எடுத்து சிறிது சர்க்கரையுடன் கலந்து 3 வேளை சாப்பிட்டு வர தலைநோய், காது வலி, பசி மந்தம், கீழ்வாய்க் கடுப்பு, மூக்கு நீர்ப் பாய்தல் முதலியவை குணமாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்