சர்க்கரை நோயாளிகள் முட்டைக்கோஸ் சாப்பிடலாமா?

Report Print Printha in ஆரோக்கியம்
1060Shares
1060Shares
ibctamil.com

முட்டைகோஸில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, விட்டமின் A, C, K, B1, B2, B3 மற்றும் D, பைட்டோ நியூட்ரியண்ஸ் ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளது.

இத்தகைய முட்டைகோஸை பச்சையாக சாப்பிடும் போது அதனுடைய சத்துக்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கும். எனவே முட்டைக்கோஸை பாதியளவு வேகவைத்து அல்லது பச்சையாகக சாப்பிடுவதே நல்லது.

சர்க்கரை நோயாளிகள் முட்டைக்கோஸை சாப்பிடலாமா?

முட்டைக்கோஸில் உள்ள பொட்டாசியம் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைக்கோஸை சாப்பிடுவது மிகவும் நல்லது.

முட்டைக்கோஸின் இதர நன்மைகள்
  • புற்றுநோய், இதய நோய் மற்றும் ஆண்மை குறைபாடு போன்ற பிரச்சனைகளை குறைத்து தடுக்கிறது.
  • உடலில் அழற்சி அல்லது உட்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைகோஸை சாப்பிட்டால் நல்ல பலனை பெறலாம்.
  • முட்டைக்கோஸில் உள்ள விட்டமின் C, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கிறது.
  • கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்து, கண் கோளாறுகள் மற்றும் நரம்புத் தளர்ச்சி வராமல் போக்குகிறது.
  • முட்டைக்கோஸில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனையை குணமாக்குகிறது.
  • அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம்.
  • முட்டைக்கோஸை தினசரி உணவில் சேர்த்து வந்தால், அதிக பசி எடுப்பதை தடுத்து, தொப்பை மற்றும் உடல் பருமனைக் குறைக்கிறது.
  • முட்டைக்கோஸில் உள்ள லாக்டிக் அமிலம், குடலில் உள்ள நோய்த்தொற்றுக்களை அழித்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • முடைக்கோஸில் உள்ள கால்சியம் மற்றும் விட்டமின் K எலும்புகள் மற்றும் பற்கள் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
குறிப்பு

ஒரு நாளைக்கு ஒரு கப் நிறைய முட்டைகோஸ் சாப்பிட்டாலே உடல் ரீதியான அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வினை காணலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்