தினமும் இந்த பழத்தை 3 துண்டுகள் சாப்பிட்டு வாருங்கள்: உடலில் நிகழும் அற்புத மாற்றங்கள்

Report Print Kabilan in ஆரோக்கியம்

ஆரோக்கியம் நிறைந்த அத்திப்பழத்தை, தினமும் 3 உலர் துண்டுகளாக சாப்பிட்டு வந்தால் ஏராளமாக நன்மைகளை பெறலாம்.

பொதுவாக அத்திப்பழத்தை இரண்டாக பிளந்தால், அதில் முழுக்க புழுக்களைப் போல் விதைகள் இருக்கும் என்பதால் பலர் அதனை சாப்பிடுவதை தவிர்த்து விடுகிறார்கள்.

ஆனால், அத்திப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பழத்தை உலர்த்தி பதப்படுத்துவதன் மூலமாக, பருவ காலங்களிலும் இதனை சாப்பிடலாம்.

அத்திப்பழத்தால் கிடைக்கும் நன்மைகள்
செரிமான சக்தி

உலர்ந்த அத்திப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் உள்ளன. எனவே இதனை ஒரு நாளைக்கு 3 துண்டுகள் அளவுக்கு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் கிடைக்கும்.

இதன்மூலம் மலச்சிக்கல் தீரும். மேலும் செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்து, குடலியக்கம் சீராகும்.

எடை குறைப்பு

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், உலர் அத்திப்பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இதில் கலோரிகள் மிக குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன.

இதனால் இது உடலில் உள்ள 0.2 கிராம் கொழுப்பை கரைக்கும். நொறுக்குத்தீனி சாப்பிடும் நேரத்தில் அத்திப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.

ரத்த அழுத்தம்

உலர் அத்திப்பழத்தில் சோடியம் மிக மிக குறைவாக இருக்கும் என்பதால், உயர் ரத்த அழுத்தத்தை இது குறைக்கும். எனவே அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் ரத்த அழுத்தம் அதிகரிப்பதை தவிர்க்கலாம்.

ஆண்டி ஆக்சிடண்ட்

ஆண்டி ஆக்சிடண்டுகள் உலர் அத்திப்பழத்தில் மிக அதிக அளவில் உள்ளன. அத்துடன் வைட்டமின் சி, வைட்டமின் ஈ ஆகியவையும் அதிக அளவில் உள்ளன.

இதய நோய்கள்

உலர் அத்திப்பழத்தில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட், உடலில் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும். இதன் மூலம் இதய நோய்கள் தடுக்கப்படும். மேலும் ரத்த அழுத்தம் குறைவதால், கரோனரி எனும் நோயின் தாக்கமும் குறையும்.

புற்றுநோய்

புற்றுநோய் செல்கள் உருவாவதை அத்திப்பழத்தில் உள்ள ஆண்டி ஆக்சிடண்டுகள் தடுக்கின்றன. அத்திபழத்தின் மூலம் டிஎன்ஏ பாதிப்பும் தடுக்கப்படும். எனவே புற்றுநோய் உருவாகும் வாய்ப்பும் மிக குறைவு.

எலும்புகளின் வலிமை

ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 3 சதவித அளவு கால்சியம் உள்ளது. எனவே, ஒரு நாளைக்கு ஒரு உலர் அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதால் எலும்புகளுக்கு வலிமை கூடும். அத்துடன் கால்சியத்தின் அளவும் உடலில் அதிகரிக்கும்.

நீரிழிவு

உலர் அத்திப்பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் நீரீழிவை இது கட்டுப்படுத்தும். எனினும், சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு எவ்வளவு அத்திப்பழங்களை சாப்பிடலாம் என்பதை ஆலோசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ரத்த சோகை

இரும்புச்சத்து அதிக அளவில் உலர் அத்திப்பழத்தில் உள்ளது. எனவே, ஹீமோகுளோபினை உடல் முழுவதும் எடுத்துச் செல்ல இது உதவும். தினமும் ஒரு உலர் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், உடலில் ஹீமோகுளோபினின் அளவு அதிகரித்து, ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்