அசைவ உணவுகளை அதிக அளவில் சாப்பிடும்போது ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

சைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும், அசைவ உணவை அதிகம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையே அதிகரித்து வருகிறது.

அசைவ உணவுகளை அளவுடன் உண்ணுவது அவசியமாகும். அளவுக்கு மீறினால் தீமைகளை விளைவிக்க வாய்ப்புள்ளது.

அந்தவகையில் தற்போது அசைவ உணவுகள் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • அசைவ உணவுகளை அதிக அளவில் சாப்பிடும்போது உடலில் புரதத்தின் அளவு அதிகமானவுடன் உடல் அமைப்பானது மாறுபட்டு உடல் எடை அதிகரிக்க செய்கின்றது.

  • அதிக அளவிலான அசைவ உணவுகளை உண்ணும்போது புரோட்டீன் அளவு உடலில் அதிகரிக்கின்றது. இதன் காரணமாக புரோட்டின் உடலில் அதிகமாக சேரும்போது தூக்கம் ஏற்படுகிறது. அது மட்டுமின்றி அசைவ உணவுகள் ஜீரணிக்க நீண்ட நேரங்களில் எடுத்துக்கொள்கின்றன.

  • அசைவ பிரியர்கள் சைவ உணவுகளை அதிக அளவில் உட்கொள்ள மாட்டார்கள். இதனால் சருமம் பொலிவு பாதிப்பது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்திகள் அதிக அளவில் உடலில் சேர்வதில்லை.

  • அசைவ உணவுகளில் சில இறைச்சிகளில் உடல்நிலை கோளாறுகளை ஏற்படுத்தும். ஏனெனில் இறைச்சிகளின் நேரம் தாமதத்தின் காரணமாகவும் சில இறைச்சிகளின் காலநிலை மாற்றங்கள் காரணமாகவும் நம் உடலில் நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

  • அசைவ உணவுகளில் குறைந்த அளவே நார்ச்சத்து உள்ளதன் காரணமாக அடிக்கடி மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

  • அசைவ உணவுகளில் கொழுப்பானது சற்று அதிகமாக காணப்படுவதால் இது இதய பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்