திருப்பதி கோவிலின் தங்கக் கிணறு: ரகசியம் தெரியுமா?

Report Print Printha in வரலாறு

ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் திராவிட பாரம்பரிய கலை அம்சத்தை கொண்டு கட்டப்பட்ட திருப்பதி பாலாஜி கோவில் அமைந்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 3200 உயரத்தில் அமைந்திருக்கும் இம்மலைகளில் ஆதிசேஷனின் வடிவாக கருதப்படும் நாராயாணாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, கருடாத்ரி, விருஷபாத்ரி மற்றும் வெங்கடாத்ரி போன்ற ஏழு சிகரங்கள் அமைந்துள்ளது.

கடவுள் ஏழுமலையானே மனித உருவில் அவதரித்ததாகவும், அவரே இந்த கோயிலைக் கட்டச் சொன்னதாகவும், முனிவர் ஒருவர் கூறியுள்ளார்.

தொண்டைமான் வம்சத்தினரே, திருப்பதி கோவிலை தங்கத்தில் அலங்கரித்ததாகவும், அந்த வம்சத்திலேயே திருமலையான் மனிதராக அவதரித்ததாகவும் ஆந்திர மக்கள் கூறுகின்றனர்.

திருப்பதி கோவில் உள்ள திருமலையின் அருகே இரண்டு தங்கக் கிணற்றில் உள்ள நீர் உபயோகப்படுத்த உகந்தது அல்ல, என்று கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு முன் அரசால் மூடப்பட்டிருந்தது.

பின்னர் 2007-ம் ஆண்டு திருமலையான் மகிமை காரணமாக இந்த கிணற்றில் உள்ள நீர் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மாறியது.

உலகிலேயே தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கிணறு இது ஒன்றுதான். இது தொண்டைமான் காலத்தில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

படிக்கட்டுகளுடன் கூடிய இந்த கிணற்றில் உள்ள நீரை எடுத்து, மனித பிறவி எடுத்த திருமலையான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஏழுமலையானுக்கு அபிஷேகம் நடத்துவாராம்.

1800-ல் 12 பேர் கோவிலுக்குள் சில தீய செயல்களை செய்ததன் விளைவாக திருப்பதியை ஆண்ட அரசன் அவர்களை தண்டித்து கோவிலை 12 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது என்று கூறுகின்றனர்.

மேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்