வீட்டில் செல்வம் அதிகரிக்க இந்த செடி போதுமாம்!

Report Print Jayapradha in வீடு - தோட்டம்

பொதுவாகவே, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும். கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது.

ஆனால் சிலருக்கு இந்த செடியை எப்படி வளர்க்க வேண்டும் என்று தெரிவதில்லை. மணி பிளான்ட் வீட்டில் வளர்க்க விரும்புவோர் அதை சரியான திசையில் வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

வைக்க வேண்டிய திசை
  • வாஸ்து நிபுணர்கள் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசை நோக்கி தான் வளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள், இந்த திசையில் தான் அதிகம் பாஸிடிவ் எனர்ஜி கிடைக்கிறது என்பதால், செல்வம் பெருகும்.
  • தென்கிழக்கு திசை விநாயகருக்கு உகந்த திசையாகும். மற்றும் இது சுக்கிரனை பிரதிநிதித்துவம் செய்யும் திசை எனக் கூறப்படுகிறது.
  • மணி பிளான்ட்டை வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என அவரவர் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் வைத்து வளர்க்கலாம். இதனால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும்.
வைக்க கூடாத திசை
  • மணி பிளான்ட்டை வடகிழக்கு திசையில் வைக்க கூடாது. ஏனெனில் இது எதிர்வினையை அதிகரிக்கும் திசை என கூறுகிறார்கள்.
  • வடகிழக்கு குருவின் திசையை பிரதிநிதித்துவம் செய்கிறது. சுக்ரனும், குருவும் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். இந்த திசையில் வைத்தால் நஷ்டம் ஏற்படும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
  • துளசி செடியை வடகிழக்கு திசையில் வைப்பது தான் சரியானது என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers