நம் வீட்டை எப்படி சுத்தமாக, அழகாக வைத்துக் கொள்ளுவது என்று பார்ப்போம்

Report Print Nalini in வீடு - தோட்டம்
0Shares

நாம் வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் பார்ப்பதற்கே அழகாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பல விதமான நோய் கிருமிகள் நம்மை தாக்குவதை கூட தடுக்கலாம். நாம் முன்னோர்கள் கூட வீட்டை மிகவும் சுத்தமாக தான் வைத்திருந்தார்கள்.

“சுத்தம் சுகம் தரும்”என்ற பழமொழி நாம் அனைவருக்கும் தெரிந்தது. நம்வீடு சுத்தமாக இருந்தால் நோய் இல்லாமல் வாழலாம்.வீடு சுத்தம் செய்வது என்பது மிகப்பெரிய வேலையாக தெரியும். மாசடைந்த சூழல் காரணமாக வீடுகளில் படியும் ஒட்டடை, தூசி போன்றவைகளை அடித்து எடுக்கவே பெரிய வேலையாக இருக்கும்.

அன்றாடம் வீடு கூட்டும் போதே அதற்கென சில மணித்துளிகள் ஒதுக்கி வீடுகளை சுத்தம் செய்யவேண்டும். இதனால் வீடு சுத்தமாவதோடு தூசு அலர்ஜி போன்றவைகளில் இருந்தும் உடல்நிலை பாதுகாக்கப்படும்.

டிப்ஸ் 1

பாத்திரங்களைக் கழுவி ஸிங்க்கை சுத்தம் செய்யுங்கள். சமையல் திண்டையும் டேபிள்களையும் சுத்தமாக வையுங்கள். தரை அழுக்காக இருந்தால், அதைக் கூட்டுங்கள் அல்லது துடையுங்கள்

டிப்ஸ் 2

வாஷ் பேஸினையும் டாய்லெட்டையும் கழுவுங்கள். பொருட்களை அவற்றிற்குரிய இடங்களில் வையுங்கள்

டிப்ஸ் 3

மழைக்காலத்தில் வெளியே செல்லும்முன்பே டவல், மாப் போன்ற பொருட்களை எடுத்துவைத்துவிட்டு செல்லவேண்டும். வீட்டிற்குள் நுழையும்போதே நம்மை நன்றாக உலர்த்திவிட்டு வந்தால்தான் ஈரம் படியாது. உலர்ந்த டவல்கள் தயாராக வைத்திருந்தால் விருந்தினர்கள் வந்தாலும் கொடுக்க எளிதாக இருக்கும்.

டிப்ஸ் 4

ரப்பர் மேட்கள் மற்றும் கார்பெட்களை வாசற்படியில் கண்டிப்பாக போட்டுவைக்கவேண்டும். குறிப்பாக ஈரமான காலங்களில் செருப்பை சுத்தப்படுத்த எளிதாக இருக்கும். இதுதவிர வீட்டிற்குள் நுழையும்போது சிறிய ஈரம் உறிஞ்சும் மேட்டையும் போட்டுவைத்தால் வீட்டை சுத்தமாக வைத்திருக்கமுடியும்.

டிப்ஸ் 5

துருபிடித்த வடைச்சட்டியை நிமிடங்களில் சுத்தமாக மாற்ற உருளைக்கிழங்கை பாதியாக வெட்டிக் கொண்டு, அதில் உப்பு மற்றும் எண்ணெயை தடவி தேய்த்தால் துருபிடித்த வடைச்சட்டி பளிச்சென்று மாறும்.

டிப்ஸ் 6

இரவு படுக்க செல்லும் முன் நாம் கழட்டி போட்ட ஆடைகளை அழுக்கு பை அல்லது கூடையில் போட்டு மூடி வைக்க வேண்டும்.அப்போது கொசு தொல்லையிலிருந்து விடுபடலாம் மட்டுமல்லாமல் துர் வாடைகள் வராமல் தடுக்கலாம்.

பின்பு காலையில் எழுந்ததும் முதலில் படுக்கையறையில் படுக்கையை உதறி மடித்து வைக்கவேண்டும். வாரத்திற்கு ஒருமுறையாவது பெட்டை நகர்த்தி உதறிப் போடவேண்டும். அப்பொழுதுதான் பூச்சிகள் எதுவும் குடித்தனம் புகாமல் இருக்கும்.

டிப்ஸ் 7

தரையைப் பெருக்குகிற போது தினந்தோறும் சுவர்கள் இணையும் இடங்களிலும் ஒட்டடை அடித்தால் வலை கட்டிய சுவர்களைக் காணவே முடியாது. பளிச்சென்று இருக்கும்.

அறைகளை துடைக்க நாம் ரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதை விட பயன்படுத்தாத பழைய ஷாம்பு மற்றும் லெமன் வாசம் வர கூடிய லிக்குய்ட் உபயோக படுத்தி துடைக்கலாம். வீடு பளிச் என்று ஆகும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்