நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் உயிரிழந்தது திட்டமிட்ட சம்பவமாக இருக்கலாம் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காவிரி நதி நீர் உரிமையை நிலைநாட்ட நாம் தமிழர்கட்சி சார்பில் நேற்று முன்தினம் கண்டன பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் தமிழகத்தின் மன்னார்குடியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞன் திடீரென தீக்குளித்தார். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கு சீமானின் முறுக்கேற்றும் பேச்சுக்களே காரணம் என பலர் கருத்து தெரிவித்து வர, அதற்கு சீமான் தமிழகத்தில் ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகரை சுட்டிக் காட்டினார்.
தற்போது ரீகன் என்ற வழக்கறிஞர், நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் எனவும், விக்னேஷ் உயிரிழந்தது திட்டமிட்ட சம்பவமாக இருக்கலாம் எனவும் புகார் தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும், பேரணியில் பலர் பங்கேற்றபோதும் விக்னேஷை காப்பாற்ற யாரும் முயற்சிக்கவில்லை என்பது சந்தேகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.