கண்விழித்து ஆங்கிலத்தில் பேசிய ஜெயலலிதா: அப்பல்லோ அப்டேட்ஸ்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஜெயலலிதாவின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டாலும், இன்னும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் நேற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆங்கிலத்தில் பேசியுள்ளார்.

அப்போது அங்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவும், எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ டாக்டர்களும் இருந்தனர்.

அவர்களிடம் முதலமைச்சர் ஜெயலலிதா, ‘நீங்கள் எனக்கு அளித்த நல்ல சிகிச்சைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

அவரது நன்றியை ஏற்றுக்கொண்ட மருத்துவர்கள், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் தெரிவித்தனர். தொடர்ந்து ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே, நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து வந்த 2 பெண் பிசியோதெரபி நிபுணர்களும் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர்.

காலை 9.30 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த அவர்கள் மாலை 6 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து, சென்னையில் தங்கியிருக்கும் அவர்கள் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சையை தொடர உள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments