சிறுமியை கொன்றது ஏன்? பெண்ணின் திடுக்கிடும் வாக்குமூலம்

Report Print Aravinth in இந்தியா

கேரள மாநிலத்தில் உறவினர் தன்னுடன் சரியாக பேசாததால் 4 வயது சிறுமியை ஆற்றில் தூக்கி வீசி கொலை செய்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கண்ணூர் அடுத்த மட்டனூரை சேர்ந்தவர் சைலஜா (46). அதே பகுதியைச் சேர்ந்தவர் ரெஜித் வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மனைவி மிஷ்மா இவருக்கு மேபா (4) என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், சைலஜாவின் நடத்தை சரியில்லை என மிஷ்மா குடும்பம் உட்பட உறவினர்கள் யாரும் சைலஜாவுடன் பேசுவதை தவிர்த்து அவரை ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதனால், மிகுந்த ஆத்திரம் கொண்ட சைலஜா இதற்கு காரணம் மிஷ்மா தான் என அவரின் குடும்பத்தை பழிவாங்குவதற்காக காத்திருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் திருச்சூரில் உள்ள மிஷ்மாவின் உறவினர் இறந்துள்ளார், இதற்காக மிஷ்மா அங்கு சென்றுள்ளார்.

இதற்கிடையே சிறுமி மேபா அங்குள்ள ஆற்றில் சடலமாக கிடந்துள்ளார், இதுபற்றி தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் கதறி துடித்துள்ளனர்.

விரைந்து வந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், சம்பவத்தன்று சிறுமி மேபாவை அவரது உறவினர் சைலஷாவுடன் ஆற்றுப்பகுதியில் பார்த்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சைலஜாவை பிடித்து விசாரனை செய்ததில் தன்னிடம் உறவினர்கள் யாரும் பேசாமால் ஒதுக்கி வைத்ததால் அவர்களை பழிவாங்க முடிவு செய்ததாகவும், அதன்படி நேற்று முன்தினம் வீட்டுக்கு முன்பு விளையாடிய சிறுமியை ஆற்றுப்பகுதிக்கு தூக்கிச்சென்று, சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு பிணத்தை ஆற்றில் வீசியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவரை கைது செய்த பொலிசார் நாளை திருச்சூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments