900 சிலிண்டர்கள் வெடித்து பயங்கர விபத்து

Report Print Aravinth in இந்தியா

கர்நாடக மாநிலத்தில் 900 காஸ் சிலிண்டர்கள் வெடித்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவின் சிக்கபல்லபூர் மாவட்டத்தில் சிந்தாமணி பகுதியில் உள்ள சிலிண்டர் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த 900 காஸ் சிலிண்டர்களும் வெடித்து சிதறியுள்ளன.

இதனால், குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகள் மற்றும் பொலிரோ வாகனமும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

குடோனானது காட்டுப் பகுதியில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும், தற்போது தீ விபத்து கட்டுக்குள் வந்திருப்பதாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments