தமிழக எம்.எல்.ஏக்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு: மாதம் எவ்வளவு தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

தமிழக எம்.எல்.ஏக்களின் மாத சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழக எம்.எல்.ஏ-க்கள் தங்களது மாத சம்பளத்தை உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து எம்.எல்.ஏ-க்களின் மாதம் சம்பளம் 55 ஆயிரத்திலிருந்து 1.05 லட்சமாக உயர்த்தப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

மேலும், தொகுதி மேம்பாட்டு நிதி 2 கோடியிலிருந்து 2.5 கோடியாக இனி உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு எம்.எல்.ஏக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments