கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி

Report Print Deepthi Deepthi in இந்தியா

தேனி மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

சரவணன், சுதா தம்பதி தனது இரு மகள்களுடன் விஷம் அருந்தியுள்ளனர். சரவணன் குடும்ப பிரச்னைக்காகவும், தொழில் முதலீட்டிற்காகவும் கந்துவட்டி கடன் வாங்கியுள்ளார்.

நாளுக்கு நாள் கந்துவட்டி கொடுமை அதிகரித்த நிலையில் சரவணன் குடும்பத்துடன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர்களை மீட்ட அக்கம்பக்கத்து வீட்டார் 4 பேரையும் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் உள்ள அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து போடி சிலமரத்துப்பட்டியைச் சேர்ந்த சுருளி என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்