நடுவானில் விமானத்தில் நிரப்பப்பட்ட எரிபொருள்: ஆச்சரிய வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

நடுவானில் ஒரு விமானத்திலிருந்து மற்றொரு விமானத்திற்கு எரிபொருள் நிரப்பும் பணியில் இந்திய விமானப்படையினர் வெற்றி பெற்றுள்ளனர்.

உலகின் பல நாடுகளில் உள்ள விமானப்படையில் நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதி கொண்ட விமானங்கள் உள்ள நிலையில் இந்தியாவில் அது இல்லாமல் இருந்தது.

இதுகுறித்து விமானப்படையினர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, டி.ஆர்.டி.ஓ எரிபொருள் நிரப்பும் வசதி கொண்ட போர் விமானம் உருவாக்கப்பட்டது.

அவாகஸ் சிஸ்டம் பொருத்தப்பட்ட இரண்டு விமானங்கள் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அதை பொருத்தும் பணி நடந்து வருகிறது.

இதற்குமுன் இருந்த அவாகஸ் மூலம் 240 கோணத்தில் மட்டுமே ஸ்கேன் செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது உருவாக்கியுள்ள விமானம் மூலம் 360 டிகிரி கோணத்தில் ஸ்கேன் செய்ய முடியும்.

விமானத்தில் ஏஇஎஸ்ஏ என்ற ரேடார் பொருத்தப்பட்டுள்ளது, உலகில் இந்த சிஸ்டம் பொருத்தப்பட்ட விமானம் கொண்ட இரண்டாவது நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers