மந்திரவாதியின் பேச்சை கேட்டு இளைஞர் செய்த விபரீத காரியம்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் இளைஞர் ஒருவர், மந்திரவாதி கூறியதற்காக சாவி, பேட்டரி, வயர், கண்ணாடித் துண்டுகளை சாப்பிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் அருகில் உள்ள பில்கிராம் பகுதியை சேர்ந்தவர் அஜய் திரிவேதி(42). இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் இவரின் திருமணம் தள்ளிப் போனதால், தனக்கு யாராவது சூனியம் வைத்திருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்படவே மந்திரவாதி ஒருவரை சந்தித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தன்னால் இதனை சரி செய்ய முடியும் என்றும், அதற்கு தான் கூறுவதை கேட்க வேண்டும் என அந்த இளைஞரிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு சரி என்று கூறிய அஜய்க்கு தினமும் ஒரு அதிர்ச்சியான வைத்தியத்தை அந்த மந்திரவாதி அளித்துள்ளார். மந்திரவாதி கூறியபடி கைப்பேசி, அதன் பேட்டரி, சாவிகள், வயர், கண்ணாடித்துண்டு, ஆணி, ஊசி என ஒவ்வொன்றாக தினமும் அஜய் சாப்பிட்டுள்ளார்.

இதனால், அஜய்க்கு பயங்கரமான வயிற்று வலி ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் Scan செய்தபோது அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலமாக அஜய்யின் வயிற்றில் இருந்த பொருட்களை, மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். மேலும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்