மெரினாவைப் போன்று தூத்துக்குடியிலும் தீ வைத்து நாடகமாடிய பொலிசார்: சிக்கிய ஆதரமான வீடியோ

Report Print Santhan in இந்தியா

சென்னை மெரினாவைப் போன்று தூத்துக்குடியிலும் பொலிசார் தீ வைத்துள்ளது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, அவர்கள் பொலிசாரை தாக்கியதாகவும், வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும், இதனால் கலவரமாக மாறியதால் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அங்கிருக்கும் படகுக்கு பக்கத்தில் பொலிசாரே தீ வைத்துள்ளனர்.

அதன் பின் தீயானது மளமளவென்று எரிகிறது. இதனால் போராட்டத்தை கலவரமாக மாற்ற பொலிசாரே தீ வைத்து நாடகமாடியுள்ளதாக போராட்டக்காரர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக சென்னை மெரினாவில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.

அதன் பின் அந்த போராட்டம் கலவரமாக மாறியது. அப்போதும் பொலிசார் ஒருவர் அங்கிருக்கும் பகுதியில் தீ வைத்தனர். அது தொடர்பான வீடியோவும் வெளியாகியிருந்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers