கள்ளக்காதல் சந்தேகத்தால் கொதிக்கும் எண்ணெயில் கையை விடச் சொன்ன மனைவி

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் கணவனின் மீது சந்தேகப்பட்டு, அவர் தொடர்பு வைத்திருக்கும் பெண்ணை கொதிக்கும் எண்ணெயில் கையை விட சொன்ன மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த தம்பதி Rahul Parmar- Suman. இந்நிலையில் ராகுலின் மனைவியான சுமன் தன் கணவன் மீது சந்தேகப்பட்டுள்ளார்.

அவர் 17 வயதுடைய ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்திருப்பதாகவும், அவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும் சந்தேமடைந்துள்ளார்.

இதனால் அவர் தன் கணவனிடம் இது குறித்து கேட்ட போது இல்லை என்று மறுத்ததால், நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அந்த பெண்ணை ராகுலின் மனைவி கொதிக்கும் எண்ணெயில் கையை விடுமாறு வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் அப்பெண் மறுக்கவே மீண்டும் வற்புறுத்தியுள்ளார். இதன் காரணமாக கொதிக்கும் எண்ணெய்யில் கைவிட்ட அப்பெண்ணின் கையில் மோசமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.

வலியால் துடித்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்த்தால், ராகுல் மற்றும் சுமனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்