பிரபல மூத்த திரைப்பட நடிகர் காலமானார்: கண்ணீரில் திரையுலகம்

Report Print Raju Raju in இந்தியா

மூத்த திரைப்பட நடிகர் ராகவா உடல்நலக்குறைவால் காலமானார்.

தெலுங்கு திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ள ராகவா, தமிழ் திரைப்படம் உட்பட 30 படங்களை தனது பிரதாப் ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் நேற்று பிரிந்தது. உயிரிழந்த ராகவாவுக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

ராகவாவின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்