காதலியை பிறந்த நாள் அன்று தனியாக அழைத்துச் சென்று கொலை செய்த காதலன்! அதிர்ச்சி சம்பவம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் பிறந்தநாளின் போது காதலியை தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று முன்னாள் காதலன் அவரை கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் Kharadi பகுதியைச் சேர்ந்தவர் Uma Baban Kapse. இவர் கடந்த புதன் கிழமை தன்னுடைய 19-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அப்போது அவரின் முன்னாள் காதலன் Gangadhar Boyale என்பவர் அவரை Lohegaon அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே தனியாக கேக் ஒன்றை வாங்கி வந்த அவர் கேக்கை வெட்டும் படி கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த Gangadhar Boyale அவரை தாக்கியதோடு, கொலை செய்துள்ளார். Chandannagar பகுதியைச் சேர்ந்த Gangadhar Boyale-ஐ கைது செய்துள்ள பொலிசார், வரும் 3-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இரண்டு பேரும் காதலித்து வந்ததாகவும், கடந்த ஏப்ரல் மாதம் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது காதலி தொடர்ந்து இவரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் வேறொரு நபரை திருமணம் செய்யவும் தயாராக இருந்ததால், ஆத்திரத்தில் காதல் அவரை கொலை செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் பொலிசாரின் விசாரணைக்கு பின்னரே இந்த கொலைக்கான முழு காரணம் என்ன என்பது தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்