நடிகர் கருணாஸ்க்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

நடிகர் கருணாஸ்க்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது,

வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருவாடானை எம்.எல்.ஏ. கருணாஸ் தமிழக முதலமைச்சரையும், காவல்துறையையும் அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

இந்த வழக்கில் கருணாஸை பொலிசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். நடிகர் கருணாஸ் பேசிய அம்சங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க பொலிசார் மனுதாக்கல் செய்தனர்.

காவலில் எடுத்து விசாரணை நடத்த பொலிசார் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின்துரை தள்ளுபடி செய்து நிலையில், ஜாமின் கோரி நடிகர் கருணாஸ் தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்