எனக்கு திருமணமாகி மூன்று மாதம் ஆகிறது! இன்ஸ்பெக்டர் இப்படி செய்வதாக இளம்பெண் புகார்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் இன்ஸ்பெக்டர் இரட்டை அர்த்ததில் பேசுகிறார் என்று புகார் அளித்துள்ளார்.

சென்னை கிழக்கு கடற்சாலையில் உள்ள காவல்நிலையத்தில் சிவன் என்ற பெயரைக் கொண்ட இன்ஸ்பெக்டர் பணியாற்றி வருகிறார். இதே காவல்நிலையத்தி பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அவர் குறித்த இன்ஸ்பெக்டர் மீது புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் கடந்த 2017-ஆம் ஆண்டு பொலிஸ் பயிற்சியை முடித்தேன். காவல் துறையில் சாதிக்க வேண்டும் என்றே இந்த பணியில் சேர்ந்தேன்.

ஆனால், சிலரின் நடவடிக்கைகள் என் மனதை பெரிதும் பாதித்தது. எனக்குத் திருமணமாகி மூன்று மாதங்கள் தான் ஆகிறது. இந்நிலையில் குறித்த இன்ஸ்பெக்டரிடமிருந்து நள்ளிரவில் அழைப்புகள் வருகின்றன. பணியின் போது தேவையில்லாமல் அவரின் அறைக்கு என்னை அழைத்து பேசுகிறார்.

அதுமட்டுமின்றி இரட்டை அர்த்ததிலும் பேசுகிறார். அவரின் செயல்பாடு எனக்கு பிடிக்காத காரணத்தினால், இதை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இதை செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இதற்கு முன்னர் பொலிஸ் ஐஜி மீது பெண் எஸ்.பி. கொடுத்த புகார் விசாரணையில் இருக்கும்போது தென்சென்னை காவல் சரகத்தில் இன்ஸ்பெக்டர் ஒருவரால் பெண் சப்-இன்ஸ்பெக்டர் பாதிக்கப்பட்ட சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்