18 வயதில் சிதைந்த வாழ்க்கை: தூக்கில் தொங்கிய கர்ப்பிணி பெண்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாகவே குறித்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

18 வயதே ஆன காவியா என்ற அந்த பெண், அதே பகுதியை சேர்ந்த வசந்த குமார் என்பவரை தனது பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்துள்ளார்.

இதனிடையே பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. தற்போது 5 மாத கர்ப்பிணியான காவியா நேற்று இரவு கணவருடன் வாக்குவாதத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த காவ்யா தூக்குப் போட்டு தற்கொலை கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்துள்ள பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers