அம்பானி கொடுக்கும் பணத்திற்காக பிரபலங்கள் உணவு பறிமாறினார்களா? கண்டனத்திற்கு ஆளான நிகழ்வு

Report Print Deepthi Deepthi in இந்தியா

முகேஷ் அம்பானி திருமணத்தில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், சோனம் கபூர், நடிகர்கள் அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், ஷாருக் கான், ஆமிர் கான் உள்ளிட்டோர் உணவு வகைகளைப் பரிமாறினர்.

குறிப்பாக அமிதாப் பச்சன் மற்றும் ஆமிர் கான் இருவரும் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறும் வீடியோ இணையதளத்தில் கடும் கண்டனத்துக்கு உள்ளானது.

இது 'சஜ்ஜன் காட்' என்னும் பாரம்பரியம். அதன்படி பெண்வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்கு உணவு பரிமாறுவர்'' என்று அபிஷேக் பச்சன் விளக்கமளித்தார்.

ஆனால், இதற்கு கண்டனம் எழுந்துள்ளது, சக நடிகர்களின் திருமணத்துக்கு சென்றபோது உணவு பரிமாறவில்லை, நண்பர்களின் திருமணத்துக்கு சென்றபோது உணவு பரிமாறாத நீங்கள், பணக்காரர் வீட்டு திருமணம் என்றவுடன் இப்படி நடந்துகொண்டீர்கள் என கூறியுள்ளனர்.

மேலும், எப்போது பணக்காரர்களுக்கு திரை நட்சத்திரங்கள் உறவினர் ஆனார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

அம்பானி கொடுக்கும் பணத்திற்காக இப்படி உணவு பரிமாறியுள்ளார்கள் என விமர்சனம் எழுந்துள்ளது.

இதற்கு முன்னர் நடந்த தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா திருமணத்தில் திரை பிரபலங்கள் இவ்வாறு நடந்துகொள்ளாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்