சென்னையில் அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை.. பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

Report Print Kabilan in இந்தியா

சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க-பா.ஜ.க இடையேயான லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தையில், பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.க பொறுப்பாளருமான பியூஷ் கோயல் லோக்சபா தேர்தல் கூட்டணியை இறுதி செய்ய சென்னை வந்திருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில், பா.ஜ.க தரப்பில் 8 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. ஆனால் பேச்சுவார்த்தையின் முடிவில் 5 தொகுதிகள் தருவதாகவும், அதற்கு பா.ஜ.கவும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். மற்றொரு கூட்டணி கட்சியான பா.ம.கவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

புல்வாமா தாக்குதலினால் இந்தியாவில் பதற்றமான சூழ்நிலை இருக்கும் நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க, தமிழகத்தின் அ.தி.மு.க கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers