68 பேரை பலிவாங்கிய சம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: வெளியாகும் முக்கிய தீர்ப்பு

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே செயல்பாட்டில் இருந்த சம்ஜோதா விரைவு ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இன்று திங்கள்கிழமை முக்கிய தீர்ப்பு வெளியாகும் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் திவானி கிராமம் வழியாக சென்றபோது குறித்த ரயில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.

பஞ்சாப் எல்லையில் உள்ள அட்டாரி ரயில் நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் அரங்கேறியது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் நாட்டவர்கள்.

கடந்த 2007 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய இந்த கோர சம்பவத்தில், 68 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக, தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ.,) விசாரணை மேற்கொண்டு வந்தது.

குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக கருதப்படும் தீவிர இந்துத்துத்வ குழுவை சார்ந்த சுவாமி அசிமானந்தாவை கைது செய்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், அசோக், சந்தீப் தாங்கே மற்றும் ராமச்சந்திர கல்சங்கரா ஆகிய மூன்று பேரும் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது தெரிந்தது. இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்ய என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு தொடர்பில் 5 பேர் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான அசிமானந்தா சமீபத்தில் பிணையில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers