தமிழிசைக்கு பதிலாக கனிமொழிக்கு வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்: குலுங்கி குலுங்கி சிரித்த பொதுமக்கள்!

Report Print Vijay Amburore in இந்தியா

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட சட்டமன்ற வேட்பாளர் சின்னப்பன், தமிழிசைக்கு பதிலாக திமுகவின் கனிமொழி பெயரை கூறி வாக்கு கேட்டுள்ளார்.

மக்களவை தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைதேர்தலானது தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் திகதியன்று நடைபெற உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தின் இருபெரும் இக்கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவுடன் சேர்ந்து அதன் தோழமை கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட உள்ள அதிமுகவின் சட்ட மன்ற வேட்பாளர் சின்னப்பன், அங்கிருக்கும் பேருந்து நிலையத்தில் தன்னுடைய பரப்புரையை துவங்கினார்.

மக்களைவை தேர்தலுக்கான தூத்துக்குடி தொகுதியில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அவருக்கும் சேர்த்து வாக்குசேகரிக்கும் முனைப்பில் ஈடுபட்ட சின்னப்பன், திடீரென குழப்பத்தில் திமுக மக்களைவை வேட்பாளர் கனிமொழியின் பெயரை உச்சரித்து ஒட்டு கேட்டார்.

இதனை கேட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்