ஜனநாயக கடமையை சரியாக ஆற்றிய உலகின் குள்ளமான பெண்.... வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in இந்தியா

உலகின் குள்ளமான பெண்ணாக அறியப்படும் ஜோதி அம்கே தேர்தலில் வாக்களித்ததன் மூலம் தனது ஜனநாயக கடமையை தவறாது ஆற்றியுள்ளார்.

இந்தியாவின் 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைப்பெற்றது.

இந்நிலையில் நாக்பூர் தொகுதியில் உலகின் குள்ளமான பெண் ஜோதி அம்கே தனது வாக்கை பதிவு செய்தார்.

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதி, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். முதலில் வாக்களித்த பின் உங்களது இதர பணிகளை மேற்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

ஜோதி உலகின் குள்ளமான பெண் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இவரது உயரம் 62.8 செண்டி மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்