இலங்கை குண்டுவெடிப்பில் தென் இந்தியாவை சேர்ந்த இருவர் பலி... ஐவர் நிலை என்ன? பெயர்கள் மற்றும் புகைப்படம் வெளியானது

Report Print Raju Raju in இந்தியா

தென் இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்த 7 பேர் இலங்கையின் Shangri-La ஹொட்டலில் தங்கியிருந்த நிலையில் அவர்களில் இருவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது.

இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொழும்பில் உள்ள Shangri-La ஹொட்டலில் குண்டு வெடித்து பலர் உயிரிழந்தனர்.

இங்கு கர்நாடாகாவை சேர்ந்த மதசார்பற்ற ஜனதாளம் கட்சியை சேர்ந்த 7 பேரும் தங்கியிருந்தனர்.

இதில் இருவர் உயிரிழந்துவிட்டதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார், மற்ற ஐவரின் நிலை குறித்து தெரியவில்லை.

ஹனுமந்தரயப்பா, ரங்கப்பா, ஷிவன்னா, புட்டராஜூ, முனியப்பா, லஷ்மி நாராயணா, மேர்கவுடா என மொத்தம் 7 பேர் கர்நாடகாவில் இருந்து ஏப்ரல் 20ஆம் திகதி இலங்கைக்கு புறப்பட்டனர்.

இந்த 7 பேரும் Shangri-La ஹொட்டலில் 618 மற்றும் 619 என இரண்டு அறைகளை பதிவு செய்திருந்த நிலையில் அங்கு தங்கியிருந்தார்கள்.

இதில் ஹனுமந்தரயப்பா, ரங்கப்பா ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர் என்பதை வெளியுறவு துறை சுஷ்மா சுவராஜ் உறுதி செய்துள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்