உடம்பெல்லாம் எரியுது சார்... ஆட்சியர் வளாகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்கு முயற்சி!

Report Print Vijay Amburore in இந்தியா

கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் ஒரு குடும்பமே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள், திடீரென 4 பேர் உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு உடலில் தீ வைக்க முயன்றுள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பத்திரிக்கையாளர்கள் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி, தங்களுடைய குடிதண்ணீரை அவர்கள் மீது ஊற்றி காப்பற்றியுள்ளனர்.

பின்னர் அவர்களிடம் நடந்தவை குறித்து விசாரிக்கும் போது, செல்வராஜ் என்பவரின் வீட்டின் அருகில் பொலிஸார் ஒருவர் வீடு கட்டிக்கொண்டு பல்வேறு வழிகளில் மனநல சித்ரவதைகளை கொடுத்து வருவதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்