படிப்பில்லை! ஆனாலும் மனைவிக்காக பிரம்மாண்ட அரண்மனை கட்டிய கணவன்... மொத்த செலவு எவ்வளவு தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

புதுச்சேரியில் மனைவிக்காக கணவர் அரண்மனையை கட்டியுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த படிக்காத கட்டடக் கலை நிபுணர் கனகவேல்.

கட்டிடக்கலையின் மீது தீராத ஆர்வம் கொண்ட கனகவேல் தனது மனைவிக்காக முகலாய கட்டடக் கலை நுணுக்கத்தில் அரண்மனை ஒன்றை கட்டி வியக்க வைத்துள்ளார்.

3 ஆயிரத்து 600 சதுர அடியில் ரூபாய் 75 லட்சம் செலவில், ஒன்றரை ஆண்டுகளில் இந்த பிரமாண்ட அரண்மனை கட்டப்பட்டுள்ளது.

வீட்டினுள் நுழைந்தவுடன் முப்பரிமாண புத்தர் சிலை, இளைப்பாற பொன்னூஞ்சல் இடம்பெற்றுள்ளது. மணிச்சித்திரத்தாழுடன் வீட்டின் உள்பகுதியில் 18 இசைத்தூண்கள், ஆண்கள் பேசுவது மட்டும் எதிரொலிக்கும் விதமாக 36 டிகிரி கோணத்தில் பெண்கள் குரல் எதிரொலிக்காத வண்ணம் தர்பார் ஹால் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் உறக்கத்திற்கு ஏற்ற அமைதியான மனச்சூழலை தரும் சந்தனம், செம்மரம், கடுக்காய், வாகை எனும் 5 வகையான மூலிகையை பயன்படுத்தி கட்டிலும், ராணிகள் பயன்படுத்தும் பன்னீர், கழுதைப்பால்,ரோஜாப்பூ மற்றும் தண்ணீர் ஆகியவை சேர்த்து நீராடும் குளியல் தொட்டியும் பழங்கால அமைப்பிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்தை கட்டி முடிக்க ஒன்றரை வருடங்கள் தேவைப்பட்டது என்றும், தமது மனைவின் ஆசைக்காக மட்டுமே இந்த வீடு கட்டப்பட்டது என்றும் கனகவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்