இலங்கை தூதரக அதிகாரிகளிடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முன்வைத்த முக்கிய கோரிக்கை

Report Print Arbin Arbin in இந்தியா

சமீப காலத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் சென்னையில் அமைந்துள்ள இலங்கை தூதரக அதிகாரிகளை சந்தித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இலங்கையில் ஈஸ்டர் நாளில் தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கு தங்கள் இரங்கலை தெரிவித்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள்,

இஸ்லாமிய சமூகத்தினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் கேட்டுக்கொண்டனர்.

தீவிரவாதத்திற்கு மதம் இல்லை என பதிவு செய்துள்ள அவர்கள், தீவிரவாத தாக்குதல்கள் உலகின் எந்த மூலையில் நடந்தாலும் இஸ்லாமியர்கள் கண்டிப்பான முறையில் கண்டனம் தெரிவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என மன்றாடுவதாக கூறியுள்ள நிர்வாகிகள்,

தற்கொலை தாக்குதலை கண்டிக்கும் வகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஈஸ்டர் நாளில் தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை தாக்குதலுக்கு பின்னர், இஸ்லாமிய சமூகத்தினருக்கு எதிராக வன்முறை சம்பவங்கள், மசூதிகள் தாக்கப்படுவது, சொத்துக்களை நாசம் செய்வது உள்ளிட்டவை தொடர்ந்து அரங்கேறி வருவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுச் செயலாளர் ஈ. முஹமத் முறையிட்டுள்ளார்.

இலங்கை தூதர அதிகாரிகளுடனான சந்திப்பின்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுச் செயலாளர் ஈ. முஹமத் உடன் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்