முட்டைகளை சுத்தியலால் உடைக்கும் ராணுவ வீரர்கள்! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் சியாச்சின் பனிமலையில் நிலவும் கடும் குளிரால், அங்குள்ள ராணுவ வீரர்கள் முட்டைகளை சுத்தியலை பயன்படுத்தி உடைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவின் வடக்கே 20 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள சியாச்சின் பனிமலை, உலகின் மிகவும் குளிர்ச்சியான போர்க்கள பகுதியாகும். இங்குள்ள குளிரை பொருட்படுத்தாமல் பல சங்கடங்களுக்கு இடையே, ராணுவ வீரர்கள் பலர் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பனிச்சரிவும், நிலச்சரிவும் இங்கு அடிக்கடி நடைபெறுவது வழக்கம். எனவே எதிரிகளுடனான போரை விட, கடுங்குளிர் மற்றும் குளிர் காற்று தான் ராணுவ வீரர்களை வெகுவாக பாதிக்கிறது.

இந்நிலையில், தங்களது நிலை குறித்து 3 ராணுவ வீரர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வீரர் ஒருவர் பழச்சாறு Cover ஒன்றை பிரிக்கிறார். உள்ளே செங்கல் போன்ற வடிவில் பழச்சாறு உறைந்துள்ளது.

மற்றொரு வீரர் உறைந்துபோன முட்டைகளை உடைக்க முயன்று அது முடியாமல் போகிறது. எனவே, சுத்தியலை பயன்படுத்தி ஓங்கி அடிக்கின்றார். அத்துடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி மற்றும் உருளை கிழங்கு ஆகியவற்றையும் இதேபோன்று உடைக்க முயற்சித்து அது முடியாமல் போவதை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறாக சியாச்சினில் மைனஸ் 70 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை நிலவுவதால், வாழ்க்கை நரகம் போன்று இருப்பதாக வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் ராணுவ வீரர்களை புகழ்ந்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்