நள்ளிரவில் 80 இளம் பெண்களுடன் சிக்கிய இளைஞர்கள் சம்பவத்தில் வெளியான தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் 80 பெண்களுடன் ஜோடியாக ஆட்டம் போட்ட ஐ.டி.ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த ஆலங்குப்பத்தில் உள்ள முந்திரி தோப்புக்குள் அரோ டிஜே நைட் என்ற பெயரில் ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக விழுப்புரம் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலையிலான காவல்துறையினர் ஒரு கிலோ மீற்றர் தூரம் நடந்தே சென்று நள்ளிரவில் மதுபோதையில் ஆட்டம் போட்ட வெளிநாடு மற்றும் வெளியூரைச் சேர்ந்த 80 ஜோடிகளை சுற்றிவளைத்தனர்.

சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கிவைத்திருந்த நிகழ்ச்சிப் பொறுப்பாளர் மணப்பாக்கம் யுவராஜ் கைது செய்யப்பட்டார். பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 5 பேர் சிக்கினர். பெட்ரோமாக்ஸ் லைட் பறிமுதல் செய்யப்பட்டது.

பொலிசாரிடம் சிக்கிய 80 பெண்களை அவர்களது எதிர்காலம் கருதி எச்சரித்து அனுப்பிய காவல்துறையினர், ஐ.டி ஊழியர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர்.

இவர்களில் சினிமா உதவி இயக்குனர் ஒருவரும் அடங்குவார். தனது கதையில், காட்டில் வரும் நள்ளிரவு நடனக் காட்சியை படம் பிடிப்பது தொடர்பாக ஆய்வுசெய்ய தனது ஜோடியுடன் வந்ததாக அவர் நடித்துப் பார்த்தும் பலன் அளிக்கவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மணப்பாக்கம் யுவராஜின் பேச்சை நம்பி ஆன்லைனில் 1,000 ரூபாய் செலுத்தி பொலிஸ் வலையில் சிக்கி உள்ளனர் இந்த உல்லாச விரும்பிகள். தமிழக பொலிசாரின் எல்லை என்பதை மறந்து, முந்திரிக்காட்டிற்குள் இந்த நள்ளிரவு நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் யுவராஜ்.

கொலை, கடத்தல் , பாலியல் அத்துமீறல்கள் போன்றவை நடக்க நடன நிகழ்ச்சிகள் காரணமாக அமைந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இத போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வெளியூர்வாசிகள் தவிர்க்குமாறு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers