பீகார் மாநிலத்தில் நடக்கும் தொடர் சோகம்... பச்சிளம் குழந்தைகளை இழந்து கதறும் பெற்றோர்.

Report Print Abisha in இந்தியா

பீகார் மாநிலத்தில், மூளைகாய்ச்சலால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 128ஆக அதிகரித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் மூளைகாய்ச்சல் ஏற்பட்டு குழந்தைகள் தொடர்ந்து இறந்தவண்ணம் உள்ளனர். அம்மாநிலத்தில் கடும் வெப்பம் நிலவிவருவதால் நோய்தாக்கம் அதிகரித்தே காணப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது. இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்தனர். தற்போது இதன் தாக்கம் அதிகரித்துள்ளதால் கடந்த சில நாட்காளக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை 43 குழந்தைகள் பலியாகி இருந்தனர். நோய் பாதிப்பால் 117 பேர் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மூளை காய்ச்சல் பரவியிருப்பதை தொடர்ந்து நிலைமையை ஆராய மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவதுடன் சிகிச்சைகளும் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே, பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை இன்றுவரை 128 ஆக அதிகரித்துள்ளது. காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்