திருமண வாழ்க்கையை தொடங்கிய 90 நாட்களில் துடிதுடித்த இளம் புதுமண தம்பதி.. வெளியான புகைப்படம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணமான மூன்று மாதத்தில் இளம் புதுமணத்தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நிச்சாம்பாளையம் பிரப்நகர் காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (28). இவருக்கும் மஞ்சுளா (19) என்ற பெண்ணுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

மஞ்சுளா ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இவரது கணவர் பிரகாஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கணவன்-மனைவி மற்றும் அவர்களது உறவினர் செம்பருத்தி என்ற பெண் என 3 பேர் ஒரு பைக்கில் நேற்று சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென எதிரில் வேன் வந்தது. இதில் எதிர்பாராத விதமாக வேனும் - பைக்கும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து வலியால் துடித்தனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சிகிச்சை பலனின்றி பிரகாஷ், மஞ்சுளா பரிதாபமாக இறந்தனர்.

செம்பருத்திக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

திருமண வாழ்க்கையை தொடங்கிய மூன்று மாதத்தில் இளம் தம்பதி உயிரிழந்தது அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்