சென்னையில் கணவன் மனைவி போல வாழ்ந்தோம்... வீடியோ ஆதாரத்தை... கண்ணீருடன் பேசிய இளம்பெண்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் இளைஞர் தனக்கு தாலி கட்டிவிட்டு இரண்டாம் திருமணம் செய்து கொள்ள சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாக இளம்பெண் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

சென்னையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருப்பவர் உஷா. இவர் காவல்துறை ஆணையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், மென்பொருள் பொறியாளரான ரமேஷ் என்பவர் எனக்கு பேஸ்புக் மூலம் நண்பரானார்.

பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பித்த நிலையில் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார், இதனால் நானும் அவரும் கணவன், மனைவி போல வாழ்ந்தோம்.

பின்னர் ஒருநாள் வேளச்சேரியில் ரமேஷ் தங்கியிருந்த வீட்டுக்கு சென்ற போது அவர் எனக்கு தாலி கட்டினார்.

இந்நிலையில் திடீரென என்னை வீட்டுக்கு அழைத்த ரமேஷ் தாலியைக் கழற்றும்படி மிரட்டினார். நான் மறுத்ததால் என்னை சரமாரியாகத் தாக்கினார்.

பிறகு தாலியைக் கழற்றிவிட்டு நானும் அவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் எங்கள் காதலுக்கான அனைத்து ஆதாரங்களையும் அழித்துவிட்டார்.

அதன்பிறகுதான் வரும் புதன்கிழமை அவருக்கு திருமணம் என்ற தகவல் வாட்ஸ் அப் மூலம் எனக்கு வந்தது. உடனே அவரிடமும் ரமேஷின் அப்பாவிடமும் போனில் பேசினேன்.

என்னிடம் உனக்கு நல்ல பையன் கிடைப்பான். நான் உனக்கு சரியாக இருக்க மாட்டேன் என்று ரமேஷ் கூறினார்.

அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ரமேஷ் கூறுகையில், உஷா கூறுவதில் உண்மையில்லை. என்னுடைய திருமணத்தை அவர் தடுத்து நிறுத்தியதால் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க உள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...