40 வருடங்களாக கண்ணாடிகளை சாப்பிட்டு வரும் நபர்... இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா? வெளியான வீடியோ

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் 40 ஆண்டுகளாக கண்ணாடி துண்டுகளை சாப்பிட்டு வரும் நபரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் திண்டோரியைச் சேர்ந்தவர் தயாராம் சாஹூ(60). இவர் சிறு வயதில் இருந்தே கண்ணாடி துண்டுகள் சாப்பிடுவடை பழக்கமாக கொண்டுள்ளார்.

தற்போது 40 வயதாகும் இவர் இப்போது வரை கண்ணாடி துண்டுகளை சாப்பிட்டு வருகிறார்.

இதனால் இந்த இடைப்பட்ட காலத்தில் இவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்று கேட்டால், அவர் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று சாதரணமாக சிரித்து கொண்டே கூறுகிறார்

இது குறித்து அவர் கூறுகையில், சிறு வயதில் எதையாவது செய்ய வேண்டும் என்று கண்ணாடித் துண்டுகளை வாயில் போட்டு சாப்பிட ஆரம்பித்தேன்.

ஆனால் அதுவே காலப்போக்கில் பழகிவிட்டது. இப்போது விடமுடியவில்லை. இது உண்மையிலேயே உடலுக்கு ஆபத்தான ஒன்று. யாரும் இதை பின்பற்ற வேண்டாம். இதைச் சாப்பிடுவதால் எனக்கு இதுவரை பாதிப்பில்லை என்றாலும் பற்கள் பாதிப்படைந் துள்ளன.

எனது குடும்பத்தினருக்கும் இது தெரியும். திருமணமான புதிதில், என் மனைவி இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள், கடந்த 40, 45 வருடங்களாக இதை சாப்பிட்டு வருகிறேன். இப்போது குறைத்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

இவர் கண்ணாடி துண்டுகள் சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்