இருசக்கர வாகனத்தில் அசுரவேகம்... தமிழகத்தை உலுக்கிய இரட்டைக் கொலை: வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றவர்களை தட்டிக்கேட்ட இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியை சேர்ந்த 38 வயதான முருகேசன் என்பவர் மெரைன் இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார்.

அவரது நண்பர் விவேக்(38) தனியார் ஷிப்பிங் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் சிவந்தகுளம் பகுதியில் இன்று மாலை நின்று கொண்டு இருந்த போது,

அங்கே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் அவர்களை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

ரத்தவெள்ளத்தில் சரிந்த அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், இன்று பிற்பகல் கொலை செய்த கும்பல் சிவந்தாகுளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதாகவும், அதனை கொலைசெய்யப்பட்ட இருவரும் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே இக்கொலை தொடர்பாக இருவரை சந்தேகத்தின் பேரில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்