தேவாலயத்திற்குள் 3 மாணவிகளுக்கு வன்கொடுமை.. ஒரு சிறுமி எடுத்த தைரியமான முடிவு: பாதிரியார் சிக்கினார்

Report Print Basu in இந்தியா

கேரளாவில் பாதிரியார் 9 வயது சிறுமிகள் மூன்று பேரை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பள்ளி ஆசிரியை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள Syro Malabar தேவாலயத்தில் பாதிரியாராக இருக்கும் 68 வயதான George Padayattil மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிரியார் மூன்று சிறுமிகளையும் தகாத முறையில் தொட்டதாக Vadakkekkara காவல் நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த மாதம் சிறுமிகள் ஞாயிற்றுக்கிழமை பிராத்தனைக்கு பிறகு ஆசீர்வாதம் பெறுவதற்காக பாதிரியார் அறைக்கு சென்றுள்ளனர். அப்போது George Padayattil, சிறுமிகளை தகாத முறையில் தொட்டதாக சிறுமிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிறுமிகளில் ஒருவர் நடந்த கொடுமையை தனது பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்ததையடுத்து சிறுமிகளின் கதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆசிரியை குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

George Padayattil (newsminute)

குழந்தைகள் நலக் குழு மூலம் பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று சிறுமிகளும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து வரும் தோழிகள் என தெரியவந்துள்ளது. மூன்று சிறுமிகளின் பெற்றோருக்கு மாணவிகளுடன் பேசிய பள்ளி ஆசிரியர்களால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ), சட்டப்பிரிவு 10 (மோசமான பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை) மற்றும் பிரிவு 11 (பாலியல் துன்புறுத்தல்) ஆகியவற்றின் கீழ் பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்கள் வாக்குமூலத்தை நீதிபதியிடம் சத்தியப்பிரமாணத்தின் கீழ் கொடுத்தனர். அதன் பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அறிக்கையின் நகலைப் பெற நாங்கள் காத்திருக்கிறோம், அதைத் தொடர்ந்து பாதிரியார் மீதான குற்றச்சாட்டுகளை அதிகரிப்போம் என்று காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்