டெல்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி குத்திக்கொலை! சாக்கடையிலிருந்து உடல் கண்டெடுப்பு! நெஞ்சை உருக்கும் காட்சி

Report Print Basu in இந்தியா

டெல்லி வன்முறையின் போது உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

26 வயதான அங்கித் சர்மாவின் உடல் இன்று வடகிழக்கு மாவட்டத்தின் சந்த் பாக் பகுதியில் உள்ள சாக்கடையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பின்னர் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அங்கித் சர்மா உளவுத்துறையில் பாதுகாப்பு உதவியாளராக பணிபுரிந்தார் என்று அவரது சகோதரர் அங்கூர் கூறினார்.

செவ்வாய்க்கிழமை மாலை 4:30 மணியளவில் அவர் பணியில் இருந்து திரும்பினார், அந்த பகுதியில் என்ன நடக்கிறது என்பதைக் காண வெளியே சென்றார். அப்போது அவர் போராட்டகார்களிடம் சிக்கியதாக அவரது சகோதரர் கூறினார்.

சர்மா குத்தப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டார், அங்கித்தை காப்பாற்றச் சென்ற அவரது நண்பர்களையும் போராட்டகாரர்கள் பிடித்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இடைவிடாமல் துப்பாக்கிச் சூடு நடத்தி யாரையும் அங்கித் அருகே செல்ல அனுமதிக்கவில்லை என்று அவரது சகோதரர் கூறினார். அங்கித்தின் தந்தை தேவேந்திர சர்மா டெல்லி காவல்துறையில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் அங்கித் சர்மாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.

வீடியோவை காண இங்கு கிளிக் செய்யவும்..

இத்தகைய துன்பகரமான உயிர் இழப்பு. குற்றவாளிகளை விடக்கூடாது. ஏற்கனவே 20 பேர் உயிர் இழந்துள்ளனர். டெல்லி மக்கள் கஷ்டப்படுவதைப் பார்ப்பது மிகவும் வேதனையானது.

இந்த துயரத்திலிருந்து விரைவில் மீண்டு வருமாறு பிரார்த்தனை செய்கிறேன், மக்கள் மற்றும் சமூகத்திற்கும் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்