14 வயது சிறுமியை அழைத்து சென்று 17 வயது சிறுவன் கொடூர செயல்! பதற வைக்கும் சம்பவத்தின் பின்னணி

Report Print Santhan in இந்தியா
2815Shares

இந்தியாவில் 14 வயது சிறுமியை 17 வயது சிறுவன் நடுக்காட்டிற்குள் வைத்து வன்கொடுமை செய்துள்ளதுடன், சிறுமியை தாக்கி கிணற்றில் தள்ளிவிட்டு சென்ற சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பால்ராம்பூர் மாவட்டத்தில் சங்கர்நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் கடந்த ஜுன் 24-ஆம் திகதி 14 வயது மதிக்கத்க்க சிறுமி தன் தோழிகளுடன் கடைக்கு சென்றார்.

அன்றைய தினம் சிறுமியின் அக்காவிற்கு வீட்டில் திருமணம் என்பதால், சிறுமி கடைக்கு சென்றதை கவனிக்காமல், வீட்டிற்கு வந்த உறவினர்களை சிறுமியின் குடும்பத்தினர் கவனித்து வந்தனர்.

இந்நிலையில் கடைக்கு சென்ற சிறுமியின் நண்பரான 17 வயது சிறுவன் காட்டுப்பகுதிக்கு செல்லலாம் என்று சிறுமியை அழைக்க, சிறுமியும் தெரிந்தவன் என்பதால், அவன் பின்னாடியே சென்றுள்ளார். அதன் பின் அந்த காட்டிற்குள் வைத்து சிறுமியை வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளான்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, கூச்சலிட்டதால், பயத்தில் சிறுவன் அருகில் இருந்த கட்டையை எடுத்து சிறுமியை தாக்கியதால், சிறுமி மயக்கமடைந்து கிழே விழுந்துள்ளார்.

இதையடுத்து சிறுமியை வன்கொடுமை செய்துள்ளான். மயக்கம் தெரிந்த சிறுமி தன்னை விட்டுவிடும் படி கெஞ்சிய போதும், சிறுவனோ, அந்த சிறுமியை இழுத்து கொண்டு போய், அங்கிருந்த கிணற்றில் தள்ளிவிட்டு, தப்பி ஓடியுள்ளான்.

கிணற்றில் விழுந்த சிறுமி, மயக்க நிலையிலேயே உயிரிழந்துவிட்டார். இதற்கிடையில் திருமண வீட்டில் இருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிறுமியை காணவில்லை என்று தேடியுள்ளனர். ஆனால் சிறுமி கிடைக்காததால், காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது, 2 நாட்களுக்கு பிறகு சிறுமியின் சடலம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியின் சடலம் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், 17 வயது சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்